ஐ.பி.எல் தொடர் ஒத்திவைப்பு: சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்..!

ஐ.பி.எல் தொடர் ஒத்திவைப்பு: சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்..!

கொரோனா தொற்றால் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். டி-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். 

இந்தியாவில் ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனால் நேற்று நடைபெறவிருந்த 30வது லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதாவது, கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐதராபாத் அணியின் விருத்திமான் சஹா, டில்லி அணியின் அமித் மிஸ்ரா மற்றும் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14வது ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். மே.30 ஆம் வரை நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மற்ற போட்டிகள் நடைபெறுவது குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்