வீரர்கள் பாதுகாப்பிற்கு நாங்க கிராண்டி: ஐபிஎல் சிஓஓ தடாலடி கடிதம்

வீரர்கள் பாதுகாப்பிற்கு நாங்க கிராண்டி: ஐபிஎல் சிஓஓ தடாலடி கடிதம்
வீரர்கள் பாதுகாப்பிற்கு நாங்க கிராண்டி: ஐபிஎல் சிஓஓ தடாலடி கடிதம்

ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என நிர்வாகம் உறுதியளிப்பதாக ஐபிஎல் சிஓஓ ஹேமங் அமின் கடிதம் எழுதியுள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என நிர்வாகம் உறுதியளிப்பதாக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஐபிஎல் சிஓஓ ஹேமங் அமின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள். ஐபிஎல் தொடருக்கு பின் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும். வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம். ஒவ்வொரு முறையும் ஜெயிப்பதற்காக விளையாடும் நீங்கள் இம்முறை மனித நேயத்திற்காக விளையாடுகிறீர்கள்" என தெரிவித்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com