ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் தொடர் முடிந்த உடன் நாடு திருப்ப தனி விமானம் ஏற்பாடு செய்து தர வேண்டும் எனகிறிஸ் லின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் தொடர் முடிந்த உடன் நாடு திருப்ப தனி விமானம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கிறிஸ் லின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
ஐபிஎல் 14 வது சீசன் இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி தொடரில் இருந்து சில ஆஸ்திரேலிய வீரர்கள் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் ஐபிஎல் தொடர் முடிந்ததும் அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து நாட்டிற்கு திருப்பி அழைத்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கிட்டதட்ட 10% சம்பாதிக்கிறது என்றும், ஆஸ்திரேலிய வீரர்களை பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்ல அவர்கள் பணத்தை செலவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களை விட மிக கடுமையான சூழலில் மக்கள் இருப்பதை தான் அறிவதாகவும், தாங்கள் மிகக் கடுமையான உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தே வருவதாகவும் கூறிய அவர் அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் தாங்கள் தனி விமானத்தில் நாடு திரும்புவதற்கு அரசு அனுமதி அளிக்கும் என நம்புவதாக கூறிய அவர் அபாயங்களை அறிந்தே வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனாலும், ஐபிஎல் முடிந்த பிறகு பத்திரமாக தாயகம் திரும்பினால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.