ஐபிஎல் திருவிழா: சொதப்பிய பஞ்சாப்.. சுமாராக ஆடியும் சூப்பர் வெற்றி பெற்ற கொல்கத்தா

ஐபிஎல் திருவிழா: சொதப்பிய பஞ்சாப்.. சுமாராக ஆடியும் சூப்பர் வெற்றி பெற்ற கொல்கத்தா
ஐபிஎல் திருவிழா: சொதப்பிய பஞ்சாப்.. சுமாராக ஆடியும் சூப்பர் வெற்றி பெற்ற கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ் மேன்கள் ரன்கள் எடுக்க தடுமாறி அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை தொடர்ந்து 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனை தொடர்ந்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா அணி. என்ன தான் கொல்கத்தா அணி விக்கெட்களை இழந்தாலும் கேப்டன் இயான் மார்கன் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதன்மூலம் கொல்கத்தா அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை கீழே தள்ளீ 2 வெற்றிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் கொல்கத்தா இடம் பெற்றுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com