இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்குவதாக ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்குவதாக ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில்,லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ், இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியர்கள் பலரும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளது, சோகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக நான் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.37,36,077 லட்சம்) வழங்குகிறேன். மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் இதர வீரர்களும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை வழங்குவதாக ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.