தோல்வி பயத்தை காட்டிட்டாங்க பரமா : BP ஏத்தி த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி.!

தோல்வி பயத்தை காட்டிட்டாங்க பரமா : BP ஏத்தி த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி.!
தோல்வி பயத்தை காட்டிட்டாங்க பரமா : BP ஏத்தி த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி.!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மத்தியில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மத்தியில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் 15-லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கைக்கொடுக்கவில்லை. ஒருக்கட்டத்தில் கொல்கத்தா அணி 31-5 என்ற நிலையில் இருந்தது.

இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரசூல் மற்றும் தினேஷ் கார்த்திக் பொருப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிந்த கொல்கத்தா அணிக்கு தெம்பு கொடுத்தனர். சுட்டிக் குழந்தை கரன் பந்தில் ரசூல் அவுட்டாக கொல்கத்தா அணி ஆட்டம் கண்டது. ஆனாலும் அடுத்து வந்த கம்மிஸ் அதிரடியாக விளையாடி சென்னை அணிக்கு தோல்வி பயத்தை காண்பித்தார்.

இதனை தொடர்ந்து கடைசி நேரத்தில் விக்கெட்களை பறிக்கொடுத்த கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான. இதனால் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 4 ஆட்டங்களில் ஒரு தோல்வி 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. 

பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.  3 வெற்றி 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடி 2-வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆம் இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com