கொரோனா எதிரொலி… 40 பேரை பணியில் இருந்து நீக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

கொரோனா எதிரொலி… 40 பேரை பணியில் இருந்து நீக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
கொரோனா எதிரொலி… 40 பேரை பணியில் இருந்து நீக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது அணியின் பயிற்சியாளர் கிரீம் ஹீக் உட்பட 40 பேரை நீக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது அணியின் பயிற்சியாளர் கிரீம் ஹீக் உட்பட 40 பேரை நீக்கியுள்ளது.

 சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் நடைபெறவிருந்த அனைத்து வகையான விளையாட்டுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச அளவில் பொருளாதார சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது அணியில் பேட்டிங் பயிற்சியாளர் கிரீம் ஹீக் உட்பட 40 பேரை பணி நீக்கம் செய்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இது குறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் ஏர்ல் எட்டிங்ஸ், கொரோனா பாதிப்பால் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாகவும் 40 நல்ல பணியாளர்களை இழப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். இதில் அவர்களுடைய தவறு ஒன்றும் இல்லை ஆனால் இதன்மூலம் கிரிக்கெட் பணிகளில் தொடர்ந்து ஈடுபட இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் பதிவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com