ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபரில்லை தோனி - பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி ஓபன் டாக்

ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபரில்லை தோனி - பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி ஓபன் டாக்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்து டி20 உலகக் கோப்பை போட்டியும் ஒத்திவைக்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. 

இதனால் எங்கே தோனி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவாரோ என்று தோனியின் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்கின்றனர். மேலும் பல வீரர்கள் தோனி மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்து தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் தோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேஷவ் பானர்ஜி பேட்டியளித்துள்ளார். அதில் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து நான் ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல தோனி என்றும்,  அவருக்கு எப்படி அதைத் தெரிவிப்பது எனத் தெரியும் என்றும் கூறினார்.

மேலும் அவர் விளையாடியது போதும் என நினைத்தால் முறைப்படி பிசிசிஐக்கு தகவல் தெரிவிப்பார், ஊடகங்களுக்குத் தெரிவிப்பார். அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும்போதும் அவ்வாறே செய்தார் என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.45%
  • தவறான முடிவு
    20.61%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.93%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்