ஓய்வு பெருகிறாரா தோனி? நெத்தியடி அடித்த சாக்‌ஷி…

ஓய்வு பெருகிறாரா தோனி? நெத்தியடி அடித்த சாக்‌ஷி…

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெற்றுவிட்டதாக வெளியான செய்திக்கு அவரது மனைவி சாக்‌ஷி பதில் அளித்து அதனை சில நிமிடங்களில் நீக்கியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதியில் போட்டிக்கு பிறகு தோனி எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.  ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அவர் ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா என்று ரசிகர்கள் கவலையில் உள்ளனர். 

அத்துடன் தோனி ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை ஆடினால் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தோனி இடம் பெற வாய்ப்புஇ உள்ளது என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் ட்விட்டரில் தோனிரிடையர்ஸ் என்ற  ஹேஷ்டேக் ஒன்று ட்ரெண்டாகி வந்தது. இதனால் தோனி ஓய்வுபெறவுள்ளதாக ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தோனியின் ஓய்வு பற்றி வதந்தி பரப்புவர்களுக்குக் கட்டமாக அவரது மனைவி சாக்‌ஷி பதில் அளித்து ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில், இது வதந்தி மட்டுதான். ஊரடங்கால் மக்கள் மனத்தளவில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் அந்த பதிவை சில நிமிடங்களில் நீக்கிவிட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.37%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  5.14%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்