பிரியாணி தான் மீண்டும் நான் இந்திய அணிக்கு திரும்பாததற்கு காரணம் ... கைஃப் ஓபன் டாக்

பிரியாணி தான் மீண்டும் நான் இந்திய அணிக்கு திரும்பாததற்கு  காரணம் ... கைஃப் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் சமீபத்திய பேட்டியில், கிரிக்கெட் அணியினருடனான ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து உள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில்,கடந்த 2006 ம் ஆண்டு நொய்டாவில் உள்ள கைஃப் வீட்டில் இந்திய அணி வீரர்கள் விருந்திற்காக அழைத்ததாகவும் அதில் சச்சின், கங்குலி, தோனி, ரெய்னா, பயிற்சியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டதாகவும் கூறினார்.

அப்போது அனைவரையும் நன்றாக கவனிக்க வேண்டும் என பதற்றத்தில் சீனியர்களை தனியறையிலும் தோனி, ரெய்னா போன்ற ஜூனியர்களை தனியறையிலும் இருக்கும் படி செய்ததாகவும், சீனியர்களை கவனிக்க வேண்டும் என ஜூனியர் வீரர்களை சரியாக கவனிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் பிரியாணி பரிமாறியபோது தோனிக்கு நான் சரியாக கவனிக்கவில்லை என்பதால் தான் தோனி கேப்டன் பதவி ஏற்றத்தில் இருந்து தான் இந்திய அணியில் இடம்பெறவில்லை என வேடிக்கையாக கூறினார்.

தோனி இன்னும் அந்த விருந்து பற்றி ஞாபகம் வைத்துள்ளதாகவும் 'நான் உங்கள் வீட்டிற்கு வந்தேன், நீங்கள் சரியாக கவனிக்கவில்லை' என்று அவர் விளையாட்டாக இன்றும் கூறுவார் என்றும் கைஃப் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்