நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சியைத் தொடங்கிய டுட்டி சந்த் - ஓட முடியாமல் திணறல்

நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சியைத் தொடங்கிய டுட்டி சந்த் - ஓட முடியாமல் திணறல்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கனவில் டுட்டி சந்த் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கில் வீட்டில் முடங்கியுள்ளதால் டுட்டு சந்த் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. இதனை தொடர்ந்து அவர் பயிற்சிகாக விளையாட்டு அமைச்சகத்தில் சிறப்பு அனுமதி பெற்றார். இதனை தொடர்ந்து புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் தனது வழக்கமான பயிற்சியை அவர் தொடங்கியுள்ளார். 

இதற்கு அனுமதி அளித்த இந்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு டுட்டி சந்த் நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி பயிற்சியாளர் இல்லாமல் தனியாகத்தான் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஓடுவதால் ஓடுவதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக வேதனை தெரிவித்த அவர் மீண்டும் பழைய நிலமைக்கு வர இன்னும் இரண்டு மாதம் ஆகும் எனவும் தெரிவித்தார். 

மேலும் தற்போது உடல் தகுதியை மேம்படுத்தும் பயிற்சியை மேற்கொள்வதாகவும், இதே போல் இரண்டு, மூன்று மாதங்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே தன்னுடைய பழைய ஓட்டவேகத்தை அடைய முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வருகிற டிசம்பர் மாதம் வரை சர்வதேச போட்டிகள் ஏதும் நடக்கப்போவதில்லை, எனவே அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு என்னுடைய முழு திறனையும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் வெளிப்படுத்துவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்