டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஒத்திவைப்பு? ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்…

டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஒத்திவைப்பு? ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்…

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட டி20 உலகக்கோப்பை மேலும் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் அக்டோபர் - நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக்கோப்பை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐசிசி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலமாக இந்த வாரம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பின் டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவின் எல்லைகள் செப்டம்பர் மாதம் வரைமூடப்படுகிறது. உள்நாட்டு பயணிகளுக்கு இரண்டு வாரம் தனிமைப்படுத்து கொள்ள வேண்டும் என்ற சட்டவிதிமுறைகளால் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஐசிசி உலகக் கோப்பை போட்டியை அடுத்த ஆண்டு பிப்பரவரி - மார்ச் மாதத்தில் நடத்த ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் ஐசிசி-யின் அடுத்த தலைவர் மற்றும் தேர்தல் நடத்தப்டும் தேதி உள்ளிட்டவையும் முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்