அதுக்கு கங்குலி தான் சரிப்பட்டு வருவார்… கிரீம் ஸ்மித் ஓபன் டாக்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை பதவிக்கு கங்குலிதான் சிறந்தவர் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐசிசியின் தலைவராக தற்போது ஷஷாங்க் மனோகர் பதவியில் உள்ளார். இவரது பதவிக்காலம் இந்த மாதம் இறுதியில் நிறைவடைகிறது. இதனால் அந்த பதவிக்கு அடுத்து யார் வருப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும், பெரும் போட்டியும் நிலவி வருகிறது.

இந்நிலையில் அந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் தற்போதைய தலைவருமான கங்குலிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து கிரீம் ஸ்மித் கூறுகையில், கிரிக்கெட்டின் தேவைகளை நிர்வாக ரீதியாக அறிந்தவர் என்பதால் கங்குலி ஐசிசி தலைமை பதவிக்குத் தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார். 

ஸ்மித்தின் இந்த கருத்தை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியும் ஆதரவு அளித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்