பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும்… அஸ்வின் ஓபன் டாக்

பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும்… அஸ்வின் ஓபன் டாக்

பந்துகளை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஐசிசி சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் தொடங்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளும் ஐசிசியும் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தொற்றை கவனத்தில் வைத்து பந்துகளை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதிக்க ஐசிசி சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது.

ஐசிசியின் இந்த முடிவுக்கு பல்வேறு நாடுகளின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பந்து ஸ்விங் ஆவது குறைந்து, போட்டிகளின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்றும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தர முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எச்சிலுக்கு மாற்று என்பது கண்டிப்பாக வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பந்தை ஷைன் செயவ்தற்கு எச்சிலை பயன்படுத்துவது என்பது ஒரு வழக்கம் என்றும், அதை பயன்படுத்தாமல் பவுலிங் செய்ய போதிய பயிற்சி அவசியம் என்றும்  ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இன்ஸ்டா நேரலையில் பங்கேற்ற அஸ்வின், வீரர்கள் அனைவரும் இணைந்து, இதை பயிற்சி செய்தால், இது சாத்தியமே என்றும் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்