லஞ்சம் கொடுக்க கூறினார்கள்… விராட் கோலி ஓபன் டாக்

அணியில் இடம் பெற லஞ்சம் கொடுக்க மறுத்ததால் அணியில் இடம்பெறாமல் போனதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை உள்ளது. இணைய தளத்தில் ஆக்டிவாக உள்ள பிரபலங்கள் தங்களது அனுபவங்கள், மறக்க நினைவுகளை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது தந்தை மூலம் அவர் வாழ்வில் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் குறித்து நினைவுக்கூர்ந்துள்ளார். 

இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரியுடன், விராட் கோலி  இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினார். அப்போது பேசிய அவர், “டெல்லி ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு என்னை தேர்வு செய்ய லஞ்சம் கேட்டார்கள், ஆனால் எனது தந்தை நேர்மையான முறையிலும், கடின உழைபின் மூலம் வழக்கறிஞரானவர். இதனால் அவர் லஞ்சம் கொடுக்க மறுத்ததோடு சொந்த உழைப்பாலும் திறமையாலும்தான், நான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்” என கோலி தெரிவித்துள்ளார். 

 “சிறப்பாக விளையாடிய போதும், லஞ்சம் கொடுக்காததால் என்னால் அணியில் இடம்பெற முடியாமல் போனது. இதற்காக நான் அழுதேன்.. ஆனால் இந்த உலகம் இப்படித்தான் இருக்கும், நாம் நம் சொந்த திறமையால் முன்னேற வேண்டும் என்று அன்று நான் கற்றுக்கொண்டேன்”என கோலி தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்