தனது மகனுக்கு ஹேர்கட் செய்யும் சச்சின் வைரலாகும் வீடியோ…

தனது மகனுக்கு ஹேர்கட் செய்யும் சச்சின் வைரலாகும் வீடியோ…

உலகை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இதன் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் தனது மகன் அர்ஜூனுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஹேர்கட் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், ’குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும், அவர்களுடன் ஜிம்மில் பயிற்சி செய்வதாக இருந்தாலும், அல்லது தலை முடியை வெட்டிவிடுவதாக இருந்தாலும் சரி. “ஒரு தந்தையாக அனைத்துமே செய்ய வேண்டும். ஹேர்கட் உன்னை மேலும் அழகாக மாற்றும் அர்ஜுன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருந்த சச்சின் தனக்கு தானே ஹேர் கட் செய்துக்கொண்டார். தற்போது தனது மகனுக்கு ஹேர்கட் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்