யுவராஜின் Keep It Up செலஞ்சை… வெற்றிகரமாக முடித்த வீரர்கள்…

யுவராஜின் Keep It Up செலஞ்சை… வெற்றிகரமாக முடித்த வீரர்கள்…

யுவராஜ் சிங் உருவாக்கிய Keep It Up செலஞ்சை சச்சின், ரோகித் சர்மா மற்றும் ரஹானே மூவரும் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர்.அதன் மூலம் ரசிகர்களை உரையாடி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் யுவராஜ் சிங் பேட்டின் விளிம்பு மூலம் பந்தை விடாமல் தட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டு சச்சின், ரோகித் சர்மா, ஹர்பஜன் மற்றும் நடிகை தியா மிஷ்ரா ஆகியோர்களை செலஞ் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட சச்சின் அதற்கும் ஒரு படி மேல் சென்று கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு பேட்டின் விளிம்பில் பந்தை விடாமல் தட்டி சவாலை வெற்றிகரமாக முடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன் யுவராஜை மீண்டும் செலஞ் செய்தார்.

சச்சினை தொடர்ந்து யுவராஜின் சவாலை ஏற்ற ரோகித் சர்மா, மற்றும் ரஹானே இருவரும் Keep It Up செலஞ்சை முடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். 

யுவராஜின் Keep It Up செலஞ்சை கிரிக்கெட் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.லாக் டவுன் நேரத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்த வீரர்கள் அவ்வப்போது இம்மாதிரியான வீடியோக்களை பகிர்ந்து  வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.16%
 • அனுபவக் குறைவு
  24.24%
 • கிரிக்கெட் அரசியல்
  35.83%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.76%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்