WWE நட்சத்திரங்களின் வருவாய் பட்டியல்….
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக அதிகம் பார்க்கப்படும் ஷோ - WWE நட்சத்திரங்களின் வருவாய் பட்டியல் வெளியாகியுள்ளது.
WWE எனப்படும் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் போட்டிகளுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக ரசிகர்கள் உள்ள நாடு இந்தியா. WWE நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 34 கோடி நேயர்கள் பார்கின்றனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் மத்தியில் பிரசித்தி பெற்ற WWE மல்யுத்தப் போட்டிகளில் அதிக ஊதியம் பெறுபவர் யார் என்ற கேள்வி ரசிகர்களைத் துளைக்காமல் இருந்ததில்லை.
ஹிட்மேன் அண்டர்டேக்கர், தி ராக், ஜான் சினா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் மத்தியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிரேட் காளி, ஜிண்டர் மஹால் ஆகியோரும் இதில் முத்திரை பதித்துள்ளனர்.
பணம் கொழிக்கும் இந்த WWE விளையாட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் யார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம். அதற்கு விடையாக அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் பிராக் லெஸ்னர் 10 மில்லியன் டாலர் பெருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
WWE நட்சத்திரங்கள் பெற்ற ஊதியம்:
முதலிடத்தில் பிராக் லெஸ்னர் 10 மில்லியன் டாலர்
2வது இடத்தில் ரோமன் ரெயன்ஸ் 5 மில்லியன் டாலர்
3-வது இடம்: ரேண்டி ஆர்டன் - 4.1 மில்லியன் டாலர்
4-து இடம்: சேத் ரோலின்ஸ் - 4 மில்லியன் டாலர்கள்
5-து இடம்: டிரிபிள் எச் - 3.3 மில்லியன் டாலர்
6-வது இடம்: பெக்கி லிஞ்ச் 3.1 மில்லியன் டாலர்
7வது இடம்: கோல்ட்பெர்க் - 3 மில்லியன் டாலர்
8வது இடம்: ஷேன் மெக் மோகன் 2.1 மில்லியன் டாலர்
9வது இடம்: ஸ்டெபானி மெக்மோகன் - 2 மில்லியன் டாலர்
10வது இடம்: பிராவ்ன் ஸ்ட்ரோமேன் - 1.9 மில்லியன் டாலர்
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் நிஜ பிகிலை ஞாபகம் இருக்கா.?


இந்தியாவின் தங்க மங்கையை ஞாபகம் இருக்கா?
