போய் உங்க நாட்டுக்கு எதாவது செய்: அப்ரிடிக்கு சின்ன தல பதிலடி!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். 

இதை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இதில் கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், யுவ்ராஜ் சிங் ஆகியோரை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் அப்ரிடிக்கு சுரேஷ் ரெய்னா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரெய்னா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிச்சை எடுக்கும் நிலையில் உள்ள ஒரு நாட்டிற்கு தொடர்புடைய ஒருவர் இப்படி பேசுவது ஆச்சரியமாக உள்ளது. அதனால் காஷ்மீரை தனியாக விட்டுவிட்டு தோல்வியடைந்த நாட்டிற்கு எதாவது செய்ய முயற்சிக்கலாம். நான் ஒரு பெருமையான காஷ்மீரி, அது இப்போதுமட்டுமல்ல எப்போதும் இந்தியாவின் தவிரக்கமுடியாத அங்கமாகவே இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவில் ரெய்னா அப்ரிடியின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவருக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பதிவை உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்