சச்சினுடன் அந்த போட்டியில் நான் விளையாடி இருக்கலாம்… கோலியின் ஆசை

சச்சின் டெண்டுல்கர் விளையாடிய போட்டிகளில் தனக்கு பிடித்த போட்டி குறித்து பேசி உள்ளார் விராட் கோலி.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளது. இதனால் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் விளையாட்டு வீரர்கள் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். 

அந்த வகையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியிடம் இன்ஸ்டாகிராம் லைவில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியுடன் பேசினார். அப்போது விராட் கோலியிடம் சுனில் சேத்ரி  “நான் இந்தப் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தது எந்தப் போட்டியில்” என்று கேட்டார். 

இதற்கு பதில் அளித்த விராட் கோலி, 1998 ஆம் ஆண்டு கோக-கோலா கப் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி என்று கூற உடனே சுனில் சேத்ரி இறுதிப் போட்டியா? அல்லது அதற்கு முந்தைய போட்டியா? என்று கேட்டார்.   

இதையடுத்து விராட் கோலி நாம் இறுதிப்போடிக்கு முன்னேறிய போட்டி என்று கூறியுள்ளார். அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை அடித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க சச்சின் டெண்டுல்கர் தனி ஆளாக நின்று 131 பந்துகளில் 143 ரன்களை அடித்தார். 

இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றாலும், இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்