இன்னும் 4000 ரன்களுக்கு மேல் விளாசியிருப்போம் … சச்சின்-கங்குலி நம்பிக்கை

கிரிக்கெட்டில் தற்போது இருக்கும் விதிமுறைகள் தாங்கள் விளையாடும் போது இருந்திருந்தால் இன்னும் 4000 ரன்களுக்கு மேல் விளாசியிருப்போம் என ஐசிசி டிவிட்டர் பதிவிற்கு சச்சின், கங்குலி பதில் அளித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் உரையாடுவதுடன் தங்கள் கிரிக்கெட் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் சச்சின் -கங்குலி இணையை கவுரவிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் அரங்கில் ஆல் டைம் சிறந்த பாட்னர்ஷிப் ஆக பார்க்கப்படும் இவர்கள் 176 ஒருநாள் போட்டிகளில் 8227ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த இணை என்ற சாதனையை பெற்றுள்ளது. குறிப்பாக இதுவரை எந்த பாட்னர்ஷிப் -ம் ஆறாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை என குறிப்பிட்டுள்ள ஐசிசி, ஜாம்பவான்களான இவர்கள் இருவரின் ஸ்கோரையும் குறிப்பிட்டு கவுரவித்தது.

ஐசிசி-யின் இந்த பதிவிற்கு பதிலளித்த சச்சின், தற்போதைய கிரிக்கெட் விதிகள் அப்போது நடைமுறையில் இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக நிறைய ரன்கள் அடித்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், இது மிகச்சிறந்த நினைவுகளை கொடுத்துள்ளது எனவும், 4 பீல்டர்கள் மற்றும் 2 புதிய பந்து விதிகள் அப்போது இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கலாம் தாதா என தனது நினைவை கங்குலியை டேக் செய்து கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து பதிவிட்டுள்ள தாதா கங்குலி நான்காயிரம் ரன்கள் அல்லது அதற்கு மேல்... போட்டியின் முதல் ஓவரில் கவர் டிரைவில் பவுண்டரிக்கு பறப்பது போன்ற உணர்வு என குறிப்பிட்டிருந்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்