எனது மகனுக்கு வயதாகி விட்டதா? தோனியின் தாய் ரியாக்ஷன்…

எப்போதும் வித்தியாசமான கெட்டபுகளால் கிரிக்கெட் ரசிகர்கள் மனதை இழுத்தவர் தோனி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட தலைமுடி வைத்திருந்தார். 

அதன்பிறகு கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து தனது தலையை மொட்டையடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதற்கிடையில் அவர் தாடி வைக்க ஆரம்பித்தார். ஆனால் மீண்டும் 2019 உலகக் கோப்பைக்கு முன்பு சுத்தமான மொட்டை தலைக்கு மாறினார்.

இதனிடையே எம்.எஸ்.தோனி தனது மகளுடன் பண்ணை வீட்டில் விளையாடும் காட்சி ஒன்றை பிசிசிஐ ட்விட்ட்டர் பக்கத்தில் பகீர்ந்திருந்தது. அந்த வீடியோ காட்சியில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்தார் அந்த போட்டோ இணையத்தில் வைரலானது. பழைய மாதிரியான ஹேர் ஸ்டைல்  இல்லை.

மேலும் அவர் நரைத்த தாடியுடன் சற்று சோர்வாக தெரிந்தார். இதனை தொடர்ந்து இந்தியாவின் முன்னாள் கேப்டனுக்கு வயதாகி விட்டது என இணையத்தில் விமர்சனங்கள் பரவியது.

இந்நிலையில் இந்தக் கருத்திற்கு பதிலளித்த தோனியின் தாய் தேவகி தேவி, தனது மகனுக்கு சமூக ஊடங்களில் சிலர் கூறிய அளவுக்கு இன்னும் வயதாகவிஉல்லை என்று மருத்துள்ளார். அவர் “ஆம், நான் அவரது புதிய தோற்றத்தைக் கண்டேன். ஆனால் தோனி அவ்வளவு வயதானவர் அல்ல. எந்தவொரு தாய்க்கும் எந்தக் குழந்தையும் வயதாவதாக தெரிவதில்லை என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்