ராஜஸ்தான் போட்டியில் கோபடமடைந்த தோனி செய்த காரியம்… உண்மையை போட்டு உடைத்த மிட்சல் சாண்ட்னர்

2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அம்பயருடன் வாக்குவாதம் செய்த தோனி போட்டி முடிந்த பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டத்தாக நியூசிலாந்து வீரரும், சென்னை அணி வீரருமான மிட்சல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஐபிஎல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வீட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள் இணையத்தில் ஆக்டிவாக உள்ளனர். தங்கள் விளையாட்டு அனுபவங்களையும் பகீர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் பேசிய நியூசிலாந்து வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல்ரவுண்டருமான மிட்சல் சாண்ட்னர் கடந்த 2019ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய போட்டியில் தோனி கோபமடைந்த நிகழ்வு குறித்து நினைவு கூர்ந்துள்ளார். 

அந்த நிகழ்வு குறித்து மிட்சல் சாண்ட்னர் கூறுகையில், ”அன்று தோனி நடந்து கொண்ட விதம் எனக்கு மட்டுமல்ல அணியின் மற்ற வீரர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அன்று அவர் வெளிப்படுத்தியது கோபமல்ல. அது தோனி சென்னை அணியுடன் எவ்வளவு ஐக்கியமாக இருக்கிறார் என்பதை மட்டுமே காட்டியது. அன்று நாங்கள் போட்டி முடிந்த பின்பு பெவிலியன் நோக்கி சென்றுக் கொண்டிருந்தோம். அப்போது தோனி நடுவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் தன் செயலுக்காக நடுவரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டார் ”என்று தெரிவித்தார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்