தோனி,கோலி எனக்கு உறுதுணையாக இல்லை.. யுவராஜ் ஆதங்கம்!

2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்றவர் யுவராஜ் சிங். அதன்பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும்  இந்திய அணிக்கு திரும்பினார். ஒரு சில போட்டிகளில் யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனையடுத்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். அண்மையில் தனது கிரிக்கெட் அனுபவம் குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில், 'சவுரவ் கங்குலி தலைமையில் விளையாடியது எனது மனதில் பசுமையான நினைவாக உள்ளது. அதன் பிறகு தலைமை தோனியிடம் சென்றது. சிறந்த கேப்டன் தோனியா? கங்குலியா? என்று சொல்வது சிரமம்.

எனக்கு கங்குலி உறுதுணையாக இருந்தார். ஆனால் அவரைப் போல தோனியும், கோலியும் எனக்கு உறுதுணையாக இல்லை. இருவரிடமும் சாதகமும் பாதகமும் நிறைய இருக்கிறது' என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்