இரண்டாவது முறையாக தந்தையானார் சின்ன தல..!

இரண்டாவது முறையாக தந்தையானார் சின்ன தல..!

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக அதிரடி வீரராக விளையாடி வந்தார். ஃபார்மில் இல்லாததால் இந்திய அணியில் இடம் பெற போராடி வருகிறார். 

இவர் கடந்த 2018 ஜூலை 17ம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டி தொடரில் கடைசியாக பங்கேற்றார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறார். 

இந்நிலையில் ரெய்னாவின் மனைவி பிரியாங்கா நேற்று ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக ரெய்னா தந்தையாகியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2016ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகள் பிறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மகன் பிறந்த செய்தியை ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்