வா.. வா... மஞ்சள் மலரே.. பூனம் யாதவை வரவேற்ற சிஎஸ்கே!

வா.. வா... மஞ்சள் மலரே.. பூனம் யாதவை வரவேற்ற சிஎஸ்கே!
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோனியின் ஆட்டத்தை காண ஆவலாக இருந்த ரசிகர்கள் இறுதியில் ஏமாற்றம் அடைந்தனர். 

மகளிர் ஐபிஎல் தொடர் நடத்த வேண்டும் என்று இந்திய வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெற்றால் எந்த அணியில் விளையாடுவீர்கள் என ரசிகர் ஒருவர் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என பதிலளித்தார்.

பூனம் யாதவை வரவேற்று ட்வீட் செய்துள்ள சிஎஸ்கே அணி, 'வா.. வா... மஞ்சள் மலரே' என பதிவிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்