ஐபிஎல் 2020 போட்டி வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2020 போட்டி வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஏற்கெனவே சென்னை வந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை சென்னை வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார். இதனை காண ரசிகர்கள் குவிந்தனர். அத்துடன் அவரது பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து தற்போது சென்னை அணியின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னா சென்னை வந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தோனியும் சுரேஷ் ரெய்னாவும் கட்டியணைப்பது போல காட்சிகள் உள்ளன. இதனை ரசிகர்கள் #chinnathala என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.