165 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி... நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதனை தொடர்ந்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா 16 ரன்களும் மயங்க் அகர்வால் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலியும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். புஜாரா 11 ரன்களிலும், விஹாரி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவடைந்தது. 

இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. களத்தில் ரகானேவும், ரிஷப் பந்தும் இருந்தனர். இந்திய அணி 132 ரன்கள் இருந்த நிலையில் ரிஷப் பந்த் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய அஸ்வின் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.  நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரகானேவும் 46 ரன்களுக்கு டிம் சவுதி பந்தில் சுருண்டார். அடுத்து களமிறங்கிய இஷாந்த் சர்மா 5 ரன்களுக்கும் ஷமி 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்