பெண்கள் டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

சர்வதேச பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் ஜெஸ் ஜொனாஸன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்ததாக களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின்  பூனம் யாதவ் 4 விக்கெட்களையும், ஷிகா பாண்டே 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகியாக பூனம் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். பெண்கள் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்