நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட்.... இந்தியா திணறல்...

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய தொடக்க ஆட்டகாரர்கள் பிரித்வி ஷா 16 ரன்களும் மயங்க் அகர்வால் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனை தொடர்ந்து கேப்டன் கைக்கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். புஜாரா 11 ரன்களிலும், விஹாரி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. 

தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவடைந்தது. களத்தில் ரகானே மற்றும் ரிஷப் பந்த் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த போட்டி நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லரின் 100-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்