ஹிட்மேன் ரோகித் சர்மா அசத்தல் ஆட்டம்... நியூசிலாந்துக்கு 180 டார்கெட்...

ஹிட்மேன் ரோகித் சர்மா அசத்தல் ஆட்டம்... நியூசிலாந்துக்கு 180 டார்கெட்...

இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க நியூசிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு டி20 போட்டியில் இந்திய வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் இதன் மூன்றாவது போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். 

கே.எல்.ராகுல் தன் பங்கிற்கு 27 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் எடுத்தது. 

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி 180 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்