கோப்பையை வெல்லுமா இந்தியா? இன்று 3வது டி20 போட்டி...

நியூசிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியுடன் நியூசிலாந்து மண்ணில் கோப்பையை வெல்லும். 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் 3வது போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் நியூசிலாந்து மண்ணில் முதன்முறையாக டி20 தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு தொடங்கும். 

அணிகள் விவரம்

இந்திய அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், ஷிவம் துபே, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், வாஷிங்கடன் சுந்தர். 

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன், ஹமிஷ் பென்னட், டாம் புரூஸ், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், ஸ்காட் குகெலெஜின், டாரில் மிட்செல், கோலின் மன்றோ, மிட்செல் சாண்ட்னர், டிம் செய்பெர்ட், ஈஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர், பிளேர் டிக்னர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்