ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு சிறந்த வீரருக்கான விருது; ஐசிசி அறிவிப்பு…!

இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, தீபக் சாஹர் உள்ளிடோருக்கு 2019ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

ஐசிசியின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மொத்தம் கடந்த ஆண்டு 7 சதம் விளாசியுள்ளார். 

உலக கோப்பை தொடரின்போது, ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவாக பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த டி-20 செயல்திறனுக்கான விருது தீபக் சாஹருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் 2019 நவம்பர் மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்