ஐசிசி டி20 தரவரிசைப்பட்டியல்… ஏமாற்றம் அளித்த இந்திய வீரர்கள்…

ஐசிசி டி20 தரவரிசைப்பட்டியல்… ஏமாற்றம் அளித்த இந்திய வீரர்கள்…

ஐசிசி டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முதல் 5 இடங்கள் பிடிக்கவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 6வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் கோலி 9வது இடம் பிடித்துள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டி20 தரவரிசைப் பட்டியல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், இங்கிலாந்தின் டேவிட் மலான், நியூசிலாந்தின் காலின் மன்றோ, ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர். இவர்களை தொடர்ந்து 6வது இடத்தில் இந்திய அணியின் கே.எல்.ராகுல் உள்ளார். 

இலங்கையுடன் நடந்த டி20 தொடரில் சிறப்பாக ஆடிய நிலையில் அவர் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளார். கேப்டன் கோலி 9வது இடத்தையும், தவான் 15வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்