விளையாட்டு
கோலியிடம் தோனி நிச்சயம் பேசியிருப்பார்.. கங்குலி ஓபன் டாக்!
கோலியிடம் தோனி நிச்சயம் பேசியிருப்பார்.. கங்குலி ஓபன் டாக்!
கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றன.
கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றன. இந்திய அணியில் தோனி தொடர்ந்து இடம்பெறாமல் இருந்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தோனி குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார். அவர் கூறும் போது, ‘தோனி தனது எதிர்கால திட்டம் தொடர்பாக கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி தேர்வாளர்களிடம் நிச்சயம் பேசியிருப்பார். இதுபற்றி விவாதிக்க வேண்டிய தளம் இது கிடையாது.
தோனி என்ன செய்ய விரும்புகிறார் என்பது அவரது முடிவு. எனக்கு அதை பற்றி தெரியாது. நானும் இதுபற்றி அவரிடம் பேசவில்லை. தோனி ஒரு சாம்பியன்’ என கூறியுள்ளார்.