விளையாட்டு
இந்து என்பதால் அவருடன் உணவு சாப்பிட வீரர்கள் மறுத்தனர்: அக்தர் ஆவேசம்!
இந்து என்பதால் அவருடன் உணவு சாப்பிட வீரர்கள் மறுத்தனர்: அக்தர் ஆவேசம்!
இந்து என்பதால் அவருடன் உணவு சாப்பிட வீரர்கள் மறுத்தனர்: அக்தர் ஆவேசம்!
பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியாவை அநியாயமாக நடத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார். கிரிக்கெட் நிகழ்ச்சியில் பேசிய சோயிப் அக்தர், டேனிஷ் கனேரியா ஒரு இந்து என்பதால், வீரர்கள் அவருடன் உணவு சாப்பிட மறுத்துவிட்டதாக சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
உங்கள் வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவை வெளியே சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினால் நீங்கள் எப்படி உணருவீர்கள்? என்று வீரர்களுக்கு அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். கனேரியா பாகிஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பாத பலர் உள்ளனர் என்றும், அவர் தொடர்ந்து தனது அணியினரால் அவமானப்படுத்தப்படுவதாகவும் அக்தர் வருத்தம் தெரிவித்துள்ளார்.