தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என ஒயிட் வாஷ் செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் தோனி செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது கங்குலி பிசிசிஐ தலைவரானது குறித்தும் தோனி குறித்தும் கேள்விகள் எழுப்பப் பட்டது.
அதற்கு கோலி, கங்குலிக்கு பிசிசிஐ தலைவரானதுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் அவர் பிசிசிஐ தலைவராக வருவது சிறப்பான விஷயம் என்றும் கூறினார்.
ஆனால் தோனி குறித்து இன்னும் கங்குலி தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும்ம் இது தொடர்பாக அவருக்கு தேவைப்படும் போது பேசுவார் என்றும் கூறினார். மேலும் இந்த விஷயம் தொடர்பாக கங்குலி தன்னை பேச அழைக்கும் போது சந்திப்பேன் என்று கூறினார்.
இதுகுறித்து, கங்குலி, கோலியை வரும் 24ம் தேதி சந்தித்து பேசவிரும்புவதாகவும், வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலிருந்து அவர் விலக முடிவெடுத்தால் அது அவரது விருப்பம் அந்த முடிவு அவரை பொறுத்ததே என்றும் தெரிவித்தார்.