விளையாட்டு
2019 உலக ராணுவ விளையாட்டுப் போட்டி: ஆனந்தன் குணசேகரன் தங்கப் பதக்கம் வென்று சாதனை!
2019 உலக ராணுவ விளையாட்டுப் போட்டி: ஆனந்தன் குணசேகரன் தங்கப் பதக்கம் வென்று சாதனை!
2019 உலக ராணுவ விளையாட்டுப் போட்டி: ஆனந்தன் குணசேகரன் தங்கப் பதக்கம் வென்று சாதனை!
சீனாவில் நடைபெற்று வரும், உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் தங்கப் பதக்கம் வென்றது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஊனமுற்ற ஆண்கள் 100 மீட்டர் போட்டியில் ஆனந்தன் குணசேகரன் தங்கப்பதக்கம் வென்றார். ஆனந்தன் பதக்கம் வெல்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே அவர் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
2018இல் நடைபெற்ற ஜகார்த்தா ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். அதே நேரத்தில், 2017 உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸில் 400 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.