இந்தியா-வங்கதேச டெஸ்ட் போட்டியை காண வங்கதேச பிரதமர் இந்தியா வரவுள்ளார்.
இந்தியா-வங்கதேச டெஸ்ட் போட்டியை காண வங்கதேச பிரதமர் இந்தியா வரவுள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டியை காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வரவிருப்பதாக பிசிசிஐயின் தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஷேக் ஹசினாவுக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் சார்பில் அழைப்பு விடுத்ததாகவும், அந்த கோரிக்கையை ஏற்று கொல்கத்தா வருவதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.