தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதன் 2 போட்டிகளில் ஏற்கெனவே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த தொடரின் இறுதி மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இதனால் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து பாலோஆன் ஆனது.
மேலும் இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா அணி வீரர்களால் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தனர். நேற்றைய ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது ஓவரிலேயே 2 விக்கெட்களையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.