'வருடமும் முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழா' - தி.மு.க உயர்நிலைச் செயல்திட்டக் குழுவில் முடிவு

ஜூன் 20-ல் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார்
உயர்நிலைச் செயல்திட்டக் குழு
உயர்நிலைச் செயல்திட்டக் குழு

'ஒரு வருடமும் முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது' என தி.மு.க உயர்நிலைச் செயல்திட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (மே 21) தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், 'திருக்குவளையில் பிறந்து - திருவாரூரில் வளர்ந்து - தமிழர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த கலைஞரின் நூற்றாண்டு விழா 2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்குகிறது.

ஜூன் 3-அன்று வட சென்னையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொள்ளும் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

ஜூன் 20-ம் நாள் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார். இந்த விழா, முழுநாள் நிகழ்வாகக் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கலைஞரின் நூற்றாண்டு விழாவினைக் கழக மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கொண்டாடும் வகையில் 2023 ஜூன் 3-ம் தேதி தொடங்கி, 2024 ஜூன் மாதம் 3-ம் தேதி வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்த வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை திருவாரூர் கலைஞர் கோட்டம் - ஊர்கள் தோறும் தி.மு.க - என்றென்றும் ; எங்கெங்கும் கலைஞர் என ஆண்டு முழுவதும் கொண்டாட முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான கழக உயர்நிலை செயல்திட்டக்குழு முடிவு செய்திருப்பது,

ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் உத்வேகமளிக்கின்ற ஒன்றாகும். நூற்றாண்டு நாயகர் கலைஞரின் புகழை பரப்புவோம் - ஊர்தோறும் கழகக்கொடி உயரப்பறக்கட்டும்' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com