வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான வியூகம் குறித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மம்தா பானர்ஜி தெளிவுபடுத்துவது இதுவே முதல் முறை.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான திரிணாமுல் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து மம்தா பானர்ஜி தெளிவுபடுத்துவது இதுவே முதல் முறை. "காங்கிரஸ் எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் போட்டியிடட்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம், அதில் தவறில்லை. ஆனால் அவர்கள் மற்ற அரசியல் கட்சிகளையும் ஆதரிக்க வேண்டும். இருப்பினும், ஆதரவைப் பெற, காங்கிரஸும் மற்ற கட்சிகளை ஆதரிக்க வேண்டும். தொகுதிப் பங்கீட்டில் அந்தந்த மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்’’ என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை இழந்த பிறகு, கர்நாடக மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.