ஊழலுக்கு எதிராக, "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபயணத்தை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கினார். கேரள செண்டிமேளம், சிலம்பாட்டம், பூர்ண கும்ப மரியாதையுடன் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்ட், ஐந்து விளக்கு, பெரியார் சிலை வழியாக நடைபயணம் நூறடி ரோட்டில் முடிவடைந்தது.
உடன் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா., மாவட்ட தலைவர் மேப்பல் சக்தியநாதன், பா.ஜ., மாநில இளைஞரணி துணை தலைவர் பாண்டித்துரை, முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் சித.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
நிறைவாக, தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலைம, மத்திய அரசு தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில் 10, லட்சத்து 76 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது.
ஜனவரியில் யாத்திரை முடியும்போது மக்களவை தேர்தலில் தமிழகம் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு வெற்றியை தருவார்கள்.
அதிகமாக கடன் வாங்கிய மாநிலத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்திற்கு 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் உள்ளது.
அடுத்தாண்டு 80 ஆயிரம் கோடி கடன் வாங்க உள்ளது. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ள நிலையில் ஒரு குடும்பத்திற்கு ரூ.ஆயிரம் வழங்க போகிறது தமிழக அரசு. 5,500 டாஸ்மாக் கடைகள் மூலம் 44 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு வருமானமாக வருகிறது.
ஆனால், மறைமுகமாக தி.மு.கவினர் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கின்றனர். தி.மு.க பிரமுகர்களின் சாராய ஆலைக்கு அதிக வருமானம் செல்வத்தால் தமிழக்தில் கள்ளுக்கடை புறக்கணிக்கப்படுகிறது.
வருமான வரித்துறை ரெய்டுக்கு பிறகு அமைச்சர் பொன்முடி ஊழல் செய்துள்ள 41 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வைத்துள்ளார். அதிகம் பேசியவர் ரெய்டுக்கு பிறகு பேசுவது இல்லை.
தமிழகத்தில் காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும் அப்போது தான், புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுர மாவட்ட விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நடை பயணத்தில் பெண்கள் வரவேற்பை பார்க்கும் போது பெண்களிடம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோபம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
இதனைத்தொடர்ந்து, அண்ணாமலை மானாமதுரையில் பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களிடம் அவரது குறைகளை கேட்டார்.