’2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபப்படுவது ஏன்?’-அண்ணாமலை விளக்கம்

கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்
’2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபப்படுவது ஏன்?’-அண்ணாமலை விளக்கம்

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபப்படுவது ஏன்? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6.70 லட்சம் கோடியாக இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, தற்போது ரூ.3.60 லட்சம் கோடியாக மாறியுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் புழக்கம் தற்போது மிகக் குறைவாக இருக்கிறது. தற்போது முற்றிலுமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இது பண மதிப்பு இழப்பு கிடையாது.

நமது பண பரிவர்த்தனையை, டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்ற வேண்டும். உலகில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம், நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல பிரதமர் முயற்சித்து வருகிறார். தேர்தலின்போது மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுப்பதுதான் திமுகவின் ஸ்டைல். 2024 தேர்தலுக்காக மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கட்டி வைத்திருக்கிறார்கள். எனவேதான் முதல்வர் கோபப்படுகிறார்.

கர்நாடகாவில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள் என கூறியுள்ளனர். கர்நாடகாவில் ஆரம்பமே குழப்பமாகத்தான் இருக்கிறது. சென்னை மெட்ரோ பணியில் நடந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கியுள்ளோம். சிபிஐ நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்’’என அவர் தெரிவித்தார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.2000 வாபஸ் குறித்து, 500 சந்தேகங்கள் 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்’’எனத் தெரிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com