'தெனாவட்டாக பேசுவதற்கு காரணம் என்ன?' - திருமாவளவன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது
திருமாவளவன்
திருமாவளவன்

'2024-ம் ஆண்டு மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி வந்துவிட்டால் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும்' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

அரியலூர் அண்ணா சிலை அருகில் சமய நல்லிணக்க கூட்டமைப்பு - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன், 'மத்தியில் அமையும் அரசு எந்த மதத்தை சார்ந்த அரசாகவும் இருக்க கூடாது, இருக்காது என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.

ஆனால், பழைய இந்தியாவில், அடிமைப்பட்டு கிடந்தவர்கள் எல்லாம் தற்போது சுதந்திரத்துடன் தெனாவட்டாக பேசுவதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டமே காரணம்.

திருமாவளவன் தெனாவட்டாக பேசுவதற்கு திருமாவளவன் காரணம் அல்ல, அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் தான் காரணம்.

நீதி என்பது 3 வகைப்படும். சமூக நீதி பொருளாதார நீதி அரசியல் நீதி என அம்பேத்கர் மூன்று வகையாக வகைப்படுத்துகிறார். அதில்கூட, நீதியில் சமூக நீதியைதான் முன்னிலைப்படுத்துகிறார். ஆனால், சமூக நீதியை ஏற்றுக்கொள்ளாத கும்பல் ஒன்று, சகோதரத்துவம் பற்றி பேசுகிறது.

மதசார்பின்மையை, ஜவஹர்லால் நேருவும், காந்தியும் விரும்பினார். அவருக்கு பின்னால் வந்த சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, தற்போது உள்ள ராகுல் காந்தி வரை விரும்புகிறார்கள். அதுதான் காங்கிரஸ் கட்சியுடன் நமக்கு இருக்கிற ஒற்றுமைப் புள்ளி.

பி.ஜே.பி-க்கு ஒரே எதிரி அரசியலமைப்பு சட்டம் தான். 2014-ம் ஆண்டு மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி வந்துவிட்டால் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்பட்டும். ஏன் தலைநகர் டில்லி கூட மாற்றப்படலாம்.

தற்போது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கவே, மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com