டி.டி.வி.தினகரன் -ஓ.பி.எஸ் சந்திப்பு- எடப்பாடி பழனிசாமி பற்றி பேசியது என்ன?
கடந்த காலங்களை மறநது விட்டு இருவரும் ஒன்றிணைந்துள்ளதாக முன்னால் முதல்வர் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இந்தச் சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். பின்னர் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பன்ருட்டி ராமசந்திரன் பேசுகையில், ’’அதிமுக நலம் கருதி அடுத்தக்கட்ட நவடிக்கைகள் எடுக்கப்படும். ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் என இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் கூறியதாவது,’’எங்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகி. திமுக பொது எதிரி. பண மூட்டை உள்ளவர்களிடம் தேவை கருதி சிலர் செல்கின்றனர். சிபிஎம், சிபிஐ போல் சேர்ந்து செயல்படுவோம், திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த தொடர்ந்து போராடுவோம். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் கையில் சின்னம் கிடைக்க வேண்டும். தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தொடர்ந்து செயலாற்றுவோம். எங்கள் இருவருக்கும் சுயநலம் கிடையாது. ஓ.பன்னீர்செல்வத்துடன் எந்த மனக்கசப்பும் இல்லை. மனதளவில் எந்த பகையுணர்வும் இல்லை.
நேரில் சந்திக்கவில்லையே தவிர, அடிக்கடி ஓ. பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தேன். ஓபிஎஸை நம்பி இருட்டில் கூட செல்ல முடியும். எடப்பாடி பழனிசாமியை நம்பிச் செல்ல முடியுமா? ’’என்றார்.
ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ‘’கடந்த காலங்களை மறந்துவிட்டு இருவரும் ஒன்றிணைந்துள்ளோம். கிரிக்கெட் போட்டி பார்க்க சென்றபோது மரியாதை நிமித்தமாக சபரீசனை சந்தித்தேன். அது தற்செயலானது, மரியாதை நிமித்தமானது. மனிதருக்கு மனிதர் மரியாதை கொடுக்கும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. சசிகலா வெளியூரில் இருப்பதால் அவர் வந்தவுடன் விரைவில் சந்திப்பேன்'’’ என்றார்.