மத்திய அமைச்சரவையில் இன்று காலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவை திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் மாளிகை ஒரு முக்கிய செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், 'மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இன்று காலை வெளியான அறிவிப்பில், 'மத்திய கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேவால் சட்டத் துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும்,
இதுவரை சட்ட அமைச்சராக பணியாற்றி வந்த கிரண் ரிஜுஜு புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்” என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் சட்டத்துறையில் இருந்து இணை அமைச்சரும் மாற்றப்பட்டுள்ளார்.