அரசியல்
தூத்துக்குடி: மகிழ்ச்சியில் சி.எஸ்.ஐ திருமண்டல பாதிரியார்கள்- காரணம் என்ன?
திருமண நிர்வாகிகள் கருத்தை ஏற்காமல் நிர்வாகத்திற்கு எதிராக போராட பாதிரியார்கள் தயாராகி வந்தனர்.
தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்தில் பணியாற்றும் குருமார்களுக்கு (பாதிரியார்கள்) 12 ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படாமல் இருந்தது. எனவே எங்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்று கடந்த மாதம் நடந்த திருமண நிர்வாகிகள் கூட்டத்தில் போர்க்கொடி தூக்கினர். அதற்கு பதில் அளித்த திருமண்டல நிர்வாகிகள் "தற்போது திருமன்றலத்தில் வருமானம் குறைவாக இருக்கிறது எனவே வருமானத்தை உயர்த்தி விட்டு சம்பளம் உயர்வு தருவதாக" சொல்லி இருந்தனர்.
திருமண நிர்வாகிகள் கருத்தை ஏற்காமல் நிர்வாகத்திற்கு எதிராக போராட பாதிரியார்கள் தயாராகி வந்தனர். இச்சூழலில், திருமண்டலத்தில் உள்ள ஆலயங்களில் இருந்து வரும் வருமானத்தை உயர்த்த முடிவு செய்தது திருமண்டல நிர்வாகம். அதை தொடர்ந்து இந்த மாதம் முதல் பாதிரியார்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டது.