ஆந்திரா மாநிலம் குப்பம் மல்லானூர் பகுதியில் 2 பேரை மிதித்து கொன்ற காட்டு யானைகள், தற்பொழுது தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதியான தகரகுப்பம் பகுதியில் நுழைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம், குப்பம் மல்லானூர் பகுதியில் 2 பேரை மிதித்து கொன்ற நிலையில் தற்பொழுது தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான தகரகுப்பம் பகுதியில் 2 காட்டு யானைகள் நுழைந்துள்ளது.
ஏற்கனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தமிழக - ஆந்திரா எல்லைப் பகுதியான திம்மம்பேட்டை, தகரகுப்பம், கனகநாச்சி அம்மன் கோயில், வீரனமலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். அதே நேரத்தில் வனத்துறையினர் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது மல்லானூர் பகுதியில் இருந்து இரண்டு காட்டு யானைகள் நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் வழியாக முகாமிட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த இரண்டு காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிகளுக்கு விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.