மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாயும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுடர்மணி. இவரது மனைவி செல்வி. இந்தத் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார் சுடர்மனி.
இவரது மூன்றாவது மகன் நவீன் குமார். அரக்கோணத்தில் தனியார் பாலிடெக்னியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென மணவாள நகர் உதவி காவல் ஆய்வாளர் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த நவீனை கஞ்சா வைத்திருப்பதாகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொய்யான குற்றச்சாட்டு கூறி கைது செய்த துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவீனுடையை குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக திருவள்ளூர் தாலுகா காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடுத்து நிறுத்தி அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை ஈடுபடுத்தி சமாதானம் செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.